மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பான வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் வணிக கட்டிடங்கள், வழிப்பாட்டு தலம் உள்ளிட்டவற்றை கட்டி ஆக்கிரமித்துள்ளதாக ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு எதிராக ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காமல் நீர் நிலையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற

கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்