மேகாலயா முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்பு

x

மேகாலயா முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்பு

  • மேகாலயா முதலமைச்சராக இரண்டாவது முறையாக கன்ராட் சங்மா பொறுப்பேற்றுக்கொண்டார்.சமீபத்தில் நடைபெற்ற மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் 26 இடங்களில் வெற்றி பெற்ற கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
  • இந்நிலையில், ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மீண்டும் முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • அவருக்கு ஆளுநர் பஹூ சவுஹான் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
  • பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • கன்ராட் சங்மாவுடன் இணைந்து 12 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்று உள்ளது.
  • பதவியேற்பு விழா நிறைவடைந்ததும் பிரதமர் மோதியுடன் இணைந்து புதிய அமைச்சரவைக் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது.

Next Story

மேலும் செய்திகள்