மேகதாது விவகாரம்: முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆலோசனை

x

காவிரி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்திக்க இருப்பதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடக அரசால் தன்னிச்சையாக மேகதாது அணை கட்ட முடியாது என்றார். எந்த சூழ்நிலையிலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது எனவும், சட்டப்படியும் அது முடியாது எனவும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், காவிரி விவகாரம், மேகதாது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்