மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு கலந்தாய்வு.. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அனைவருக்கும் சீட்

x

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

எம்பிபிஎஸ் படிப்பில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 இடங்கள் உள்ள நிலையில், 47 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடி முறையில் இன்று காலை 9 மணிக்கு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாகவே இன்று நடைபெறும் சிறப்பு கலந்தாய்வுக்கு 147 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதிபெற்றுள்ள 47 பேருக்குமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பது உறுதி ஆகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்