மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு

x

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேருவதற்கு, வரும் 20ம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 22-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. இதற்கு முன்னதாக, வரும் 20-ம் தேதி முதல் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதனிடையே, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதத்திற்கான இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு 22ஆம் தேதி முதல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்