தந்தி டிவி எதிரொலி - நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள்...JCB மூலம் அகற்றிய அதிகாரிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள் JCB இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இறைச்சி கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக கோழி, ஆடு இறைச்சி கழிவுகளை, இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக மர்ம நபர்கள் வீசி சென்றனர். இதனால் துர்நாற்றம் வீசி அவ்வழியே செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில் ஊராட்சி மற்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து JCB இயந்திரம் மூலம் கோழி இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதையொட்டி அனைவருக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
