MBBS, BDS மாணவர் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு!

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசம் வரும் புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு, கடந்த மாதம் கடைசி வாரத்தில் இருந்து, ஆன்லைன் மூலம் மாணாக்கர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 78 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்ற நிலையில், தற்போது வரை 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய இருந்த நிலையில், புதன்கிழமை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களில், மேலும் 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 16-ம் தேதி மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இம்மாதம் 3வது வாரத்தில் இருந்து கலந்தாய்வு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com