ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய அரசு பேருந்து....அலறி ஓடிய மக்கள் - சுவர் மீதி மோதி விபத்து

x

மயிலாடுதுறையில், ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய அரசு பேருந்து, அருகில் இருந்த சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறை வந்த அரசு பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், ஓட்டுநர் பேருந்தின் என்ஜினை ஆஃப் செய்யாமல், நியூட்ரலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதனிடையே, பேருந்து தானாக இயங்கத் தொடங்கியது. இதைக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பேருந்து அருகில் இருந்த சுற்றுச்சுவர் மீது மோதியதில், அதன் முன் பகுதி சேதமடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்