சிறைக்குள் அமைச்சருக்கு மசாஜ்; மந்திரியுடன் ஜெயிலுக்குள் சாவகசமாக பேசும் சிறை அதிகாரி-வைரல் வீடியோ

x

திகார் சிறையில் மசாஜ் செய்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சருடன் சிறைத்துறை அதிகாரி அஜித் குமார் உரையாடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கை, கால்களை பிடித்து விட்டு மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

சிறை கைதிக்கு ஆடம்பர வசதிகள் செய்து தந்த குற்றச்சாட்டிற்காக சிறைத்துறை அதிகாரி அஜித்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறையில் சத்யேந்தர் ஜெயினுடன், அஜித்குமார் உரையாடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அதில் கட்டிலில் படுத்திருக்கும் சந்யேந்தர் ஜெயினுடன், நாற்காலியில் அமர்ந்து அஜித்குமார் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்