"லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு" பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொதித்தெழுந்த அண்ணாமலை

x

லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மேலவை எனும் House of Lords -ல் இலங்கை தமிழர் விவகாரம் குறித்து உரையாற்றினார். இந்தியா-ஈழத்தமிழர் உறவுப்பாலம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழத்தமிழர் பிரதிநிதிகள், பிரிட்டன் வாழ் இலங்கை தமிழர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை, வட கிழக்கு பகுதியில் வசித்து வந்த ஈழத்தமிழர்கள், உள்நாட்டு போர் காரணமாக தங்கள் உடைமைகள், வீடுகளை இழந்து நிராதரவாக நின்றதாக தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, பொறுப்பேற்றதும், நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களை மீள் குடியமர்த்தும் பணிகளை தொடங்கியதாகவும் அண்ணாமலை கூறினார். கடந்த 9 ஆண்டுகளாக இலங்கையில் பல்வேறு பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், லட்சக்கணக்கில் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். குறிப்பாக இலங்கையின் வடக்குபகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில், ஸ்திரத்தன்மை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தீவிர முயற்சி மேற்கொண்டதாக அண்ணாமலை கூறினார். சுமார் 51 ஆயிரம் வீடுகள் கட்டிதரப்பட்டதாகவும், தற்போது 120 கோடி ரூபாய் மதிப்பில் கலாசார மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்