வாட்ஸ் ஆப் கொடுத்த மாஸ் அப்டேட்...இனி யாரும் தப்ப முடியாது - ஒரே புகார் எல்லாம் குளோஸ்

x

அவதூறு பரப்பும் விதமாகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ வாட்ஸ் ஆப்பில் ஸ்டேடஸ் பகிரப்பட்டால், அது குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு புகாரளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன் அடிப்படையில், வன்முறையை தூண்டும் விதமாக வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டால் பயனர்கள் அதுகுறித்து வாட்சப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி, வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அது மட்டுமல்லாமல், வாட்சப் ஸ்டேட்டஸில் தனிநபர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் புகார் செய்யலாம் என மெட்டா தெரிவித்திருக்கிறது. அப்படி செய்யப்படும் புகார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தொடர்புடைய ஸ்டேட்டஸ் நீக்கப்படும் என்றும் மெட்டா கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்