கேரள ஆளுநர் மீது மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
கேரள ஆளுநர் மீது மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டுகேரளாவில் ஆட்சியை கவிழ்க்க ஆளுநா் ஆரிஃப் முகமது கான் முயற்சி செய்து வருவதாக, மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் மற்றும் இடதுசாரி முன்னணி அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் இடதுசாரி முன்னணி அரசைக் கவிழ்க்க, ஆளுநா் தரப்பு முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணன், ஆட்சியை கவிழ்க்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவியுடன் நடைபெறும் முயற்சிகள் முறியடிக்கப்படும் என தெரிவித்தார்.
அதேசமயம், பல்கலைக் கழகங்களில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் பதவியில் அமர்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் வலியுறுத்தி உள்ளார்.
