மருது சகோதரர்களின் 221 வது நினைவு தினம் - நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை

x

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 221 வது நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 24ம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடக்கி வைத்தார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, பிடி.ஆர்.பழனிவேல் தியாகாராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், கோகுல இந்திரா, விஜய பாஸ்கர், ஆகியோர் கலந்து கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சமுதாய மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் மருது பாண்டியர்களின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்த வருகை தர உள்ளதால் பாதுகாப்பு கருதி மருது சகோதரர்கள் மணிமண்பம் செல்ல அனுமதிப்பட்ட வழி தடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .


Next Story

மேலும் செய்திகள்