தன் பால் திருமணம் குறித்த விவகாரம் - வரும் 18-ல் அரசியல் சாசன அமர்வு விசாரணை

தன் பால் திருமணத்துக்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க கோரிய மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கி விசாரிக்க உள்ளது. இதற்கான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, விசாரணைக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி பட்டியலிட உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் இதன் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எஸ். ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கி விசாரிக்க உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com