கணவனின் சந்தேகத்தால் முறிந்த திருமணம்...சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல்...

x

மயிலாடுதுறை

சந்தேகத்தால் பிரிந்து சென்ற மனைவி...

அடியாட்களை வைத்து கடத்திய கணவன்...

கணவனின் சந்தேகத்தால் முறிந்த திருமணம்...

சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல்...

லவ் பண்ண பொண்ண ஆள் வச்சு கடத்துன பல நிகழ்வுகள நம்ம குற்றசரித்திரம் நிகழ்ச்சிலயே பார்த்திருப்போம்... ஆனா, இங்க ஒருத்தர் ஊர் அறிய தாலி கட்டுன பொண்டாட்டியவே அடியாட்கள் வச்சு கிட்னாப் பண்ணிருக்காரு... காரணம் என்ன?


மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் காட்சி படுத்தியிருப்பார்கள். இங்கேயும் அப்படி தான் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி மீது சந்தேகம் கொண்டிருக்கிறார். நான்கே மாதத்தில் எல்லாம் கசந்துபோயிருக்கிறது…

என்ன நடந்தது? கடத்தப்பட்ட பெண்ணின் தற்போதைய நிலை என்ன? உயிருடன் இருக்கிறார் இல்லையா?போன்ற சந்தேகங்களோடு விசாரணையில் இறங்கினோம்…

கடத்தப்பட்டவர் உமாமகேஸ்வரி. 21 வயதாகிறது. புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர். உமாமகேஸ்வரியின் தந்தை புதுக்கோட்டை நகராட்சி தூய்மை பணியாளராக வேலைச் செய்துவந்த போதே மரணமடைந்திருக்கிறார்…

இதனால் 2020-ஆம் ஆண்டு உமாமகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது. வேலை கிடைத்ததால் உமாமகேஸ்வரி மயிலாடுதுறையிலேயே தனியே வீடெத்து தங்கியிருக்கிறார்.

வேலைக் கிடைப்பதற்கு முன்பே தந்தையின் நண்பரான புதுக்கோட்டை மாவட்டம் பல்லவராயன்பத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரை உமாமகேஸ்வரி காதலித்து வந்துள்ளார். உமாமகேஸ்வரிக்கு 20 வயது என்றால் மாரிமுத்துவுக்கு 38 வயது. கிட்டதட்ட இவர்கள் இருவருக்கும் பதினெட்டு வயது வித்தியாசம். இதனால் உமாமகேஸ்வரியின் தாய் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தன்னுடைய காதலில் உறுதியாக இருந்த உமாமகேஸ்வரி தாயின் விருப்பத்தை மீறி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாரிமுத்துவை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிறகு இருவரும் மயிலாடுதுறையில் குடியேறியிருக்கிறார்கள். எல்லாம் சுமூகமாக நடந்துமுடிந்துவிட்டதாக நினைத்தபோதுதான் மாரிமுத்து தன் சுயரூபத்தை மனைவியிடம் காட்டதொடங்கியிருக்கிறார்.

வீட்டில் வெட்டியாக இருக்கும் மாரிமுத்துவிற்கு வேலைக்குச் செல்லும் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. வேலை செய்யும் இடத்திலிருக்கும் ஊழியர்களிடம் சிரித்து பேசக்கூடாதென மனைவிக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார் மாரிமுத்து.

ஒருகட்டத்தில் மாரிமுத்துவின் கண்டிப்பு டார்ச்சராக மாற கணவரை பிரிந்து மயிலாடுதுறையிலேயே வேறுவீட்டில் குடியேறியிருக்கிறார் உமாமகேஸ்வரி. ஆனாலும் மாரிமுத்து விடுவதாக இல்லை… தொடர்ந்து மனைவிக்கு போன் செய்து கொலைச் செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.

இதனால் பயந்துபோன உமாமகேஸ்வரி தன்னுடைய தாயை வீட்டிற்கு அழைத்து பாதுகாப்பிற்காக தன்னுடனே தங்கவைத்துள்ளார்.

இப்படியே மனைவிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துவந்த மாரிமுத்து தன்னுடன் சேர்ந்தூ வாழுமாறு உமாமகேஸ்வரிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். ஆனால், உமாமகேஸ்வரி வாழ மறுப்பு தெரித்தபோதுதான் சொந்த மனைவியை ஆள்வைத்து கடத்தியிருக்கிறார் மாரிமுத்து.

உமாமகேஸ்வரி கடத்திச் செல்லப்பட்டதிலிருந்து அவருடைய செல்போனும் ஸ்விச்சிட் ஆப் என்று வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உமாமகேஸ்வரியின் தாய் மகளை மீட்டுத்தரக்கோரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.


காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பிறகே மகேஸ்வரியின் நிலமை தெரியவரும்.



Next Story

மேலும் செய்திகள்