10,000 ஊழியர்களுக்கு விழுந்த இடி - அதிர்ச்சி கொடுத்த மார்க் ஜுக்கர் பெர்க்

x

கடந்த ஆண்டு ஏற்கனவே 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், தொழில்நுட்ப குழுக்களில் மறுசீரமைப்பு மற்றும் பணிநீக்கங்கள் ஏப்ரல் பிற்பகுதியில் செய்யப்படும் எனவும், வணிகக்குழுக்களில் மே மாதம் ஆட்குறைப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பொருளாதார சரிவு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்தும் பணிகளும் கைவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்