விரைவில்... மெரினா டூ கோவளம் கடற்கரை - CMDA அதிகாரிகள் தகவல்

x

சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் வரையுள்ள 30 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும், மெரினா முதல் சாந்தோம் வரையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளதாகவும், நீலாங்கரை முதல் ஆலிவ் கடற்கரை வரை சுற்றுச்சூழல் சார்ந்த வசதிகள் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முட்டுக்காடு முதல் கோவளம் வரை நீர் விளையாட்டு வசதிகளும் இடம்பெற உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல் கிடைத்தவுடன், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் CMDA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்