மெரினா செல்பவர்களே உஷார்..மாநகராட்சி ஊழியர் போல் நடித்து மோசடி - அதிர்ந்து நின்ற குடும்பத்தார்

x

கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமத்ரா தங்கஜோதி என்பவர் குடும்பத்துடன், கடந்த 12-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு மணற்பரப்பு சென்றுள்ளார். அப்போது, கார் பார்க்கிங் டோக்கன் கொடுக்கும் மாநகராட்சி ஊழியர், கார் தவறான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியும், சரியான இடத்தில் நிறுத்துவதாகவும், அவரிடம் இருந்து கார் சாவியை வாங்கியுள்ளார். பின்னர் அந்த காரை மாநகராட்சி ஊழியர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் சுமத்ரா தங்கஜோதி புகார் அளித்தார். விசாரணையில், மாநகராட்சி ஊழியர் போல் நடித்த மர்ம நபர், காரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்