போலீசார் கட்டுப்பாட்டுக்குள் மெரினா கடற்கரை

x

போலீசார் கட்டுப்பாட்டுக்குள் மெரினா கடற்கரை


காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று காணும் பொங்கல் கொண்டாட உள்ளது. இதையொட்டி, பெசன் நகர், மெரினா கடற்கரைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உயர் கண்காணிப்பு கோபுரங்கள், தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், குளிக்கும் போது கடலில் சிக்கிக் கொண்டால், பொதுமக்களை மீட்கும் வகையில் சிறிய படகுகளும் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்