மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கு... சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள்

x

மரக்காணம் விஷச்சாராயச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டதன் பேரில், வழக்கின் முக்கிய ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார், தங்கள் விசாரணையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீனவ கிராம மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கைதானவர்களிடம் விசாரணை நடத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்