பல குடும்பங்களை ரெண்டாக்கிய 'பாவ மன்னிப்பு' பாதிரியார் புதிய வாக்குமூலம் "என்னை அவள் கட்டாயப்படுத்தினாள்"

x

சில்மிஷத்தால் சிக்கிய நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ சமூக வலைதளம் மூலம் பல பெண்களிடம் பழகி வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது...

நாகர்கோவில் காசியை ஓவர்டேக் பண்ணிட்டு சில்மிஷத்துல சிக்ஸர் அடிச்சிருக்காரு நம்ம பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ... பாதிரியாரா இருந்தப்பவும் பாவ மன்னிப்பு கேட்டு வந்த பொண்ணுங்களை எல்லாம் உஷார் பண்ணி அதை எல்லாம் வீடியோ எடுத்து வச்சு வசமா சிக்குன அவரை மறக்க முடியுமா என்ன?

காணாம போன லேப்டாப்ல இருந்து சில்மிஷ பாதிரியாரோட லீலைகள் எல்லாம் அம்பலத்துக்கு வந்து கடைசியில அவரை கம்பி எண்ண வச்சுருக்கு...

ஃபாதர் ஃபாதர்னு அன்பா கூப்பிட்டோமே.. இப்படியா பண்ணுவ நீ என நாகர்கோவில் மக்களே கொந்தளித்து போகும் அளவுக்கு சம்பவத்தை பண்ணுனவரு இவரு...

என்னோட காதலி உன்னோட மனைவியாக்கும் என சொல்ற மாதிரி அவரு கல்யாணம் பண்ணி வச்ச பொண்ணுங்கள்ல பாதி பேரு அவரோட வலையில இருந்தவங்கனு தெரியவந்து பல குடும்பங்கள்ல பிரளயம் நடந்துட்டு இருக்கு...

பெண்களோட அப்படி இப்படி இருந்த வீடியோக்கள் எல்லாம் இணையத்துல பரவி பாதிரியோர் ஆன்டோவின் லீலைகள்னு ஃபேன் கிளப் வீடியோக்கள் வேகமா சுத்திட்டு இருக்கு...

இந்த நிலையில குலசேகரத்தை சேர்ந்த பெண் ஒருத்தவங்க பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மேல புகார் கொடுத்துருக்காங்க.

போன வருஷம் வாட்ஸ் அப்ல பாதிரியார் கூட சாட்டிங்ல இருந்த அவங்க திடீர்னு அவரோட நடவடிக்கை பிடிக்காம விலகி இருக்காங்க. ஆனாலும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருந்த பாதிரியார் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அந்த பொண்ணு தன்னோட புகார் மனுவுல சொல்லியிருக்காங்க...

இந்த புகாரின் பேர்ல சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செஞ்சு பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவை ஒருநாள் காவல்ல எடுத்து விசாரிச்சாங்க.

தான் இருந்த சர்ச்சுல பிரார்த்தனைக்காக அந்த பெண் வந்ததாகவும், அப்போ ரெண்டு பேருக்கும் இடையில பழக்கம் ஏற்பட்டது உண்மைதான்னு சொல்லியிருக்காரு பெனடிக்ட் ஆன்டோ..

வாட்ஸ் அப், மெசஞ்சர், போன் கால்னு பேசி வந்த நிலையில் திடீர்னு அந்த பொண்ணு தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்துனதால அந்த பொண்ணை விட்டு விலகிட்டதா சொல்லியிருக்காரு...

இந்த மாதிரி நெறைய பொண்ணுங்களோட பழக்கம் தான். ஆனா கல்யாணத்துக்கு வற்புறுத்துனதால அவங்களை விட்டு விலகிட்டதா வாக்குமூலம் கொடுத்துருக்காரு பாவமன்னிப்பு புகழ் பாதிரியார்...

பாதிரியாரோட செல்போனும் அதுல இருந்த சில பல இத்யாதிகளும் போலீசார் வசமிருக்குற நிலையில இந்த விவகாரத்துல லிஸ்ட் எவ்ளோ தூரம் நீளும்னு தெரியல... வசமா சிக்கியிருக்குற பாதிரியார் இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல போறாருன்னும் தெரியல...


Next Story

மேலும் செய்திகள்