அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியானார் மன்பிரீத் மோனிகா சிங்..! Manpreet Monica Singh

x

அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றுள்ளார்.

ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் தற்போது தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பெல்லாயரில் வசிக்கிறார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்டி சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக மன்பிரீத் மோனிகா சிங் பொறுப்பேற்றுள்ளார்... இவரது தந்தை 1970களின் முற்பகுதியில் அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்த அவர், உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பல சிவில் உரிமை அமைப்புகளில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்