சிம்புவின் 50வது படத்தை இயக்கும் மணிரத்னம்? - 'ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கவுள்ளதாக தகவல்

x

நடிகர் சிம்புவின் 50வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 'பத்துதல' பட வெற்றிக்கு பிறகு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சிம்புவின் 50வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, 'செக்க சிவந்த வானம்' படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் 50வது படத்தை இயக்கும் மணிரத்னம்? - 'ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கவுள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்