கிரகணத்தால் செயலிழந்த மங்கள்யான்..! செவ்வாய் கிரகத்தில் நடந்த பேரதிர்ச்சி - மௌனம் காக்கும் இஸ்ரோ..?

x

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வந்த, இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலம் செயலிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டில், 450 கோடி ரூபாய் செலவில் பி.எஸ்.எல்.வி.சி.25 என்ற ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டில் செப்டம்பர் 24 ஆம் தேதி, செவ்வாய் கோளின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு கொண்டிருந்த மங்கள்யான் விண்கலத்தின் எரிபொருள் காலியாகி விட்டதாகவும், பேட்டரி செயலிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஏழரை மணி நேரமாக நிகழ்ந்த கிரகணமே மங்கள்யான் செயலிழக்க காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மங்கள்யானுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து இஸ்ரோ தலைமையகம் இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்