"மீண்டும் 'மங்கள்யான்', 'சந்திரயான்"... - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

x

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கைகோள் அனுப்பும் முயற்சி நடைப்பெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், செவ்வாய், வீனஸ் உள்ளிட்ட கோள்களுக்கு செயற்கைகோள் அனுப்பும் பணிகள் நடைப்பெற்று வருவதாக கூறினார்.

மேலும், சந்திராயன் மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்