மங்களூர் குண்டு வெடிப்பு - "காப்பாற்றி விட்டோம் என கொண்டாட வேண்டாம்" - அதிர வைக்கும் கடிதத்தால் பரபரப்பு

x

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் விசாரணை தீவிரமாகியுள்ள நிலையில், இலக்கை தொட்டவுடன் அறிக்கை வெளியாகும் என வந்த மிரட்டல் கடிதத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக், எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரிலான ஒரு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், மங்களூர் கதிரி பகுதியில் உள்ள கோயிலை தகர்க்க, முகமது ஷாரிக் சென்றபோது, நடுவழியில் குண்டு வெடித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் அமைப்பின் அறிக்கை எப்போதுமே இலக்கை எட்டியவுடன் வெளியாகும் என்றும், அதனால் முன்கூட்டியே எந்த கொண்டாட்டத்திலும் கர்நாடக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஈடுபட வேண்டாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் யாரால் எழுதப்பட்டு, சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்