மங்களூரு ஆட்டோ வெடிப்பு... "விபத்து அல்ல; தீவிரவாத தாக்குதல்" - கர்நாடக டிஜிபி பரபரப்பு தகவல்

கர்நாடகாவில் ஆட்டோவில் நிகழ்ந்த வெடி விபத்து, தீவிரவாதிகள் தயார் ஆனதற்கான அடையாளம் என அம்மாநில டிஜிபி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
x

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி படுகாயமடைந்தனர். ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட குக்கரில் பேட்டரி மற்றும் வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்பையும், அடையாள அட்டை ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பெரும்பதற்றத்தை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், கர்நாடக டிஜிபி அதிர்ச்சி தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் மங்களூருவில் நிகழ்ந்தது வெடி விபத்து அல்ல எனவும், தீவிரவாதிகள் தயார் ஆவதற்கான அடையாளம் என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கர்நாடக போலீசார், மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்