இன்று வலுப்பெறும் புயல்;சென்னைக்கு 1020 கி.மீ.தொலைவில் இருக்கு...-வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்

x

வங்கக்கடலில் இன்று புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

நேற்று இரவு நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கு 770 கிலோ மீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு கிழக்கே தென்கிழக்கு 970 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு ஆயிரத்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்