மாண்டஸ் புயலாக மாறியது எப்போது? 5 நாட்களில் என்ன நடந்தது? - முழு விவரங்கள் | Mandous Cyclone

x

கடந்த 5-ஆம் தேதி, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.

கடந்த 6-ஆம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேலும், அன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.

கடந்த 7-ஆம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அன்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்று மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டது.

கடந்த 8-ஆம் தேதி, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்ட நிலையில், வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது.

கடந்த 9-ஆம் தேதி, வடமேற்கு திசையில் நகர்ந்த மாண்டஸ், தீவிர புயல் நிலையிலிருந்து படிப்படியாக வலுவிழந்தது. மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது

டிசம்பர் 10-ஆம் தேதி, அதிகாலை 2:30 மணியளவில், புயலின் கண் பகுதி முழுமையாக மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.


Next Story

மேலும் செய்திகள்