கள்ளக்காதலியோடு தலைமறைவான தந்தை.... மது குடிக்க அழைத்து தீர்த்து கட்டிய மகன்...

x

மர்மமான முறையில் இறந்து கிடந்த லாரி ஓட்டுநர்... கள்ளக்காதலை கைவிடாததால் மகன் வெறிச்செயல்....

கள்ளக்காதலியோடு தலைமறைவான தந்தை.... மது குடிக்க அழைத்து தீர்த்து கட்டிய மகன்...

10 நாளுக்கு முன்னாடி காணாம போன ஒரு லாரி டிரைவர் ரோட்டுல அடிபட்டு இறந்து கிடந்திருக்காரு. விபத்துனு நெனச்ச கேச க்ளோஸ் பண்ண போன நேரத்துல தான் அது ஒரு கொலைத்திட்டம்னு போலீசாருக்கு தெரிஞ்சி இருக்கு. நடந்த கொலைக்கு மாஸ்டர் ப்ளான் போட்டது யாருனு தெரியுமா?


சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகம்... ஆம்புலென்சில் இருந்து ஒரு ஆணின் சடலத்தை அவசர அவசரமாக கொண்டு சென்றனர்.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் சடலத்தை கொண்டு செல்வதால் நடந்திருப்பது விபத்து என்று எண்ணி விட வேண்டாம்.

இது ஒரு திட்டமிட்ட படுகொலை.... நடந்த கோரத்திற்கு சடலத்தின் முகத்தில் இருந்த காயங்களும், முகப்பு உடைந்திருக்கும் இந்த இருசக்கர வாகனுமுமே சாட்சி.


கொல்லப்பட்டவர் மானாமதுரை அடுத்த கொம்புக்காரனேந்தல் கிராமத்தை சேர்ந்த உதயகண்ணன்.

லாரி ஓட்டுநரான இவருக்கு சொந்தமாக இரண்டு லாரிகள் உள்ளன. உதயகண்ணனுக்கு புஷ்பலதா என்பவருடன் திருமணமாகி 17 வயதில் ஜீவா என்ற மகனும் உள்ளார்.

தான் கடந்த 10 நாட்களுக்கு முன் உதயகண்ணன் திடீரென காணாமல் போயிருக்கிறார்.


கணவனை காணவில்லை என புஷ்பலதா மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உதயகண்ணனை தேடி வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் தான், இடைக்காட்டூர் டூ சிவகங்கை ரோட்டில் உதயகண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.


உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.

உதயகண்ணன் உடல் முழுதும் இருந்த காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

இருசக்கர வாகனத்தின் முன்புறத்தை யாரோ அடித்து உடைத்தது போல் இருந்திருக்கிறது.


நடந்திருப்பது நிச்சயம் கொலைதான் என போலீசார் உறுதியாக நம்பியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்த போது, உதயகண்ணன் அவரது மகன் ஜீவாவிடம் கடைசியாக செல்போனில் பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

உடனே ஜீவாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்திருக்கிறார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார்.


இதனால் ஜீவா மீதான சந்தேகம் மேலும் அதிகமாகியிருக்கிறது.

அந்த சந்தேகத்தை உறுதி செய்ய கிடுக்கிப்பிடி விசாரணை நடந்திருக்கிறது.

அப்போது தான் பெற்ற மகனே தந்தையை அடித்து கொன்றிருக்கும் அந்த பகீர் தகவல் வெளிவந்திருக்கிறது.


உதயகண்ணன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அந்த பெண்ணிடம் கொடுத்து உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார். இதனால் உதயகண்ணனின் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மனைவி மகன் என எல்லோரும் கொஞ்சி கூத்தாடி கேட்ட பிறகும், உதயகண்ணன் கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை.

ஒட்டு மொத்த குடும்பமும் உதயகண்ணன் மீது வெறுப்பிலிருந்திருக்கிறது. நாளடைவில் அந்த வெறுப்பு கொலை வெறியாக மாற, தாயும் மகனும் சேர்ந்து தந்தையின் உயிரை எடுக்க நாள் குறித்திருக்கிறார்கள்.


சம்பவம் நடந்த அன்று, தந்தையை மது குடிக்க அழைத்திருக்கிறார் மகன்.

உதயகண்ணன் எதிர்பார்த்ததோ சரக்கு... ஆனால் அவருக்கு அங்கு காத்திருந்ததோ சாவு.

நண்பர்கள் புடை சூழ தந்தையை கொடூரமாக அடித்து கொன்றிருக்கிறார் ஜீவா.


கொலையை மறைக்க, இருசக்கர வாகனத்தை உடைத்து சாலையில் வீசி விபத்து போல் ஜோடித்திருக்கிறார்.

விசாரனையின் முடிவில் ஜீவாவின் குடும்பத்தோடு சேர்த்து அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

உதயகண்ணனின் கள்ளக்காதல் அவரது உயிரை பறித்தது மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த குடும்பத்தையும் குற்றவாளி கூண்டில் நிற்கவைத்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்