அரசுப்பேருந்து ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த மேலாளர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

அரசுப்பேருந்து ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த மேலாளர் - வெளியான அதிர்ச்சி வீடியோ
Published on

புதுக்கோட்டையில், அரசுப் பேருந்து ஓட்டுநரை, கிளை மேலாளர் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழகத்தில் நிஜார் முகமது என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சரிவர பணியாற்றவில்லை எனக்கூறி, அவரை பணிமனைக்கு அழைத்த கிளை மேலாளர் அருண்குமார், தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து, சக பணியாளர்கள் நிஜாம் முகமதுவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பணியாளர்களை கூடுதல் பணி செய்ய வற்புறுத்துவதாகவும், விடுமுறை இன்றி வேலைக்கு வர கிளை மேலாளர் வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com