போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டாவில் பணம் கேட்டு மிரட்டிய நபர் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

புதுச்சேரியில், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்ததாக, சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகம் தெரியாத நபர்களிடம் இணையதளத்தில் தொடர்பு கொள்ள வேண்டாம் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com