கிணற்றுக்கு திடீர் மண் சரிவில் சிக்கிய நபர்... 11 மணி நேர போராட்டம்... மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்

x

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கிணற்றுக்குள் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய நபரை 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே செங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகன்னான். இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் முட்புதர்களை அகற்றி தூர் வாருவதற்காக உள்ளே இறங்கினார். கிணற்றினுள் அவர் பணி செய்து கொண்டிருந்த போது திடீரென கிணற்றின் அடிப்பகுதியில் உள்ள வளையம் மண்ணோடு திடீரென சரிந்தது. இதில் யோகன்னான் சிக்கிய நிலையில், பொதுமக்கள் அவரை மீட்பதற்காக கடும் முயற்சி மேற்கொண்டனர். எனினும் பலனளிக்காத நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். செங்கனூர், மாவேலிக்கரை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் 11மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர். ஒன்றின் மேல் ஒன்றாக கிணற்றில் வளையம் அமைப்பில் அமைக்கப்பட்டு இருந்த பக்கச்சுவர் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு அவர் மீட்கப்பட்டார். கிணற்றில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் சிக்கி 11 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்