50 அடி ஆழமுள்ள கிணற்றில் சடலமாக கிடந்த நபர் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, கிணற்றில் இருந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளாள கொல்லை பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய கிணற்றில், ரவி என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்