அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்..மம்தா பானர்ஜிக்கு காயம் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விரைவில் நலம் பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு கவலையடைந்ததாகவும், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் காயம் அடைந்த மம்தா பானர்ஜி, விரைவில் குணமடைந்து நலமுடன் திரும்பி வர விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com