மேடையில் வாஷிங் மெஷினில் மேஜிக்... பாஜகவை பங்கம் செய்த மம்தா - "பாத்திங்களா கருப்பு வெள்ளையா மாறிடுச்சு"

x
  • கருப்பை வெள்ளையாக்கும் வாஷிங் மெஷினாக பாஜக மாறி விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
  • மேற்கு வங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையை மத்திய அரசு வழங்காத‌தைக் கண்டித்து, முதலமைச்சர் பானர்ஜி கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • அப்போது பேசிய அவர், ஊழல் செய்தவர்கள் எல்லாம் பாஜகவில் இணந்தால் உத்தமர்களாகி விடுவார்கள் என விமர்சித்தார்.
  • இதனை சித்தரிக்கும் வகையில், 'பாஜக வாஷிங் மெஷின்' என எழுதப்பட்ட வாஷிங் மெஷின் ஒன்றை மேடையில் வைத்து, அதில் கருப்பு துணி ஒன்றை போட்டு வெள்ளை துணி ஒன்றை எடுத்துக் காட்டினார்.
  • இதுபோன்று கருப்பை வெள்ளையாக்கும் வாஷிங் மெஷினாக பாஜக மாறி விட்டதாக ம‌ம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்