தனித்த பாணி.. காந்தர்வ குரல்.. முதல் பாடலிலே பட்டிதொட்டியெங்கும் புகழ்.. மலேசியா வாசுதேவன் காற்றில் கலந்த தினம்..!

x
  • 1944ல் மலேசியாவில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்த வாசுதேவன், தனது தந்தை மற்றும் சகோரர்களிடம் இசைப் பயிற்சி பெற்றார்.
  • தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வளர்ந்ததால், சரளமாக தமிழ் பேச கற்றுக் கொண்டார்.
  • நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பின், 1970களில் திரைபட வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.
  • இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.
  • பாரதிராஜாவின் முதல் படமான16 வயதினிலே படத்தில், இளையராஜா இசையில் அவர் பாடிய பாடல் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.
  • பின்னர் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த மலேசியா வாசுதேவன், ஏராளமான தொலைகாட்சி தொடர்களிலும் நடித்தார்.
  • 2011ல் உடலநலக் குறைவு காரணமாக, 66 வது வயதில் காலமானர்.
  • உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் குரலால் ரசிகர்களை வென்ற மலேசியா வாசுதேவன் மறைந்த தினம், 2011 பிப்ரவரி 20.


Next Story

மேலும் செய்திகள்