ரோட்டோர கடையில் 'டீ' போட்ட எம்.பி. - "இது என்ன எங்கே கூட்டி போகுமோ.." - இணையத்தை கலக்கும் ட்வீட்

x

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மெஹுவா மொய்த்ரா, சாலையோர கடையில் தான் தேநீர் தயாரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணாநகர் தொகுதியின் எம்.பி-ஆக பதவி வகிப்பவர் மெஹுவா மொய்த்ரா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சாலையோர கடையில் தான் தேநீர் தயாரிக்கும் வீடியோவுடன், "தேநீர் போட முயல்கிறேன், இது என்னை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிவார்?" என்ற வாசகத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவு பிரதமர் நரேந்திர மோடியைக் குறிப்பிடுவதாக பலரும் பின்னூட்டத்தில் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்