சிவப்பு தங்கமாக உருவெடுத்த 'தக்காளி'... மில்லியனர்கள் ஆக மாறிய விவசாயிகள் | TOMATO

x

விளைச்சல் குறைவு, மழை காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. சென்னையில் நாளுக்கு நாள் உயர்ந்து செல்லும் தக்காளி விலை கிலோ 140 ரூபாயாக உயர்ந்துள்ளது. மே மாதம் கேட்க ஆள் இல்லாமல் தக்காளியை சாலையில் வீசிய விவசாயிகள் கவலையடைந்தனர். இன்று தக்காளி சிவப்பு தங்கமாக மாறியிருக்கிறது. விலை உயர்வால் தக்காளி நட்ட விவசாயிகள் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதியாகவும் மாறி வருகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் ஜுன்னார் பகுதியில் தாக்காளியை ஏக்கர் அளவில் பயிரிட்ட விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆந்திராவிலும் விவசாயிகள் விலை உயர்வில் பணக்காரர்களாகி வருகிறார்கள். 20 கிலோ பாக்ஸ் தக்காளி 2 ஆயிரத்து 500 ரூபாயையும் தாண்டி விற்கும் சூழலில், காய்க்கும் செடியையும் பத்திரமாக பராமரித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்