கோயிலுக்குள் நுழைந்த பக்தர்கள்.. தாறுமாறாக தடியடி கொடுத்த போலீஸ் - உச்சகட்ட பரபரப்பு

மகராஷ்டிராவில் கோயிலுக்குள் நுழையும் போது பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறான நிலையில், பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். புனே மாவட்டம் பந்தர்பூரில் உள்ள கிருஷ்ணரின் ஆலயத்திற்குள் நுழைவதில் பக்தர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. 75 பேரை மட்டுமே கோயில் வளாகத்தினுள் அனுமதிப்பது மரபு என கூறப்படும் நிலையில், 400 பக்தர்கள் திரண்டு கோயிலுனுள் நுழைய முற்பட்டதால் பரபரப்பானது. இதனால், நிலைமையை சரிசெய்யவும், பக்தர்களை கட்டுபடுத்தவும் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com