மகாராஷ்டிர மாநில அரசியல் நெருக்கடி - தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் | Supremecourt | Maharastra

x
  • மகாராஷ்டிர மாநில அரசியல் நெருக்கடி தொடர்புடைய மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
  • இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு 9 நாள்களாக விசாரித்தது.
  • புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஆளுநரின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் முடிவெடுத்ததற்கா காரணங்களை விளக்கினார்.
  • அப்போது பேசிய தலைமை நீதிபதி, ஆளுங்கட்சியின் கொள்கை தொடர்பாக அதிருப்தி நிலவும் பட்சத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, அரசை கவிழ்ப்பதற்கான காரணமாக அமையும் என்று கூறினார்.
  • அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர், பாஜக எம்எல்ஏக்கள் 50 பேர் எங்கள் தரப்பை ஆதரித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.
  • அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்