"மகாராஷ்டிராவின் நிலை உ.பி, பீகாரிலும் ஏற்படலாம்" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

x

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.வுக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பொறுப்பேற்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்தாஸ் அத்வாலே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது ஐக்கிய ஜனதா தள கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டதுபோன்று பீகாரிலும் விரைவில் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார். அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி வைத்துள்ள ராஷ்டிரிய லோக் தள் கட்சித் தலைவர் ஜெயந்த் செளத்ரியும் அதிருப்தியில் இருப்பதால், அவரும் விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக்கூடும் என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்