கோவையில் மணல் கடத்தல் கும்பலிடம் சிக்கிய மாயம் செய்யும் 'மேஜிக்' பேனா - "இது லிஸ்ட்லயே இல்லையே" - அதிர்ந்த அதிகாரிகள்

x

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே, களிமண் அள்ளிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சந்திராபுரம் பகுதியில், மணல் அள்ளிச் சென்ற இரண்டு லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த கனிம வளத்துறை அதிகாரிகள், லாரிகளை சோதனை செய்த போது, களிமண் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியதில், சந்திராபகம் பகுதியில் உள்ள தோப்பில் இருந்து மண் அள்ளப்பட்டது தெரியவந்தது. உடனடியாக, சம்பந்தப்பட்ட தோப்புக்குச் சென்ற அதிகாரிகள், ஜேசிபி இயந்திரம், இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர். பின்னர், லாரியில் இருந்த ஆவணங்களை சோதனை செய்த போது, சந்தேகத்துக்கிடமான முறையில் பேனா ஒன்று இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில், காலாவதியான தேதிகளை மறைப்பதற்காக இந்த பேனாவை ஓட்டுநர்கள் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. மேலும், இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்