இருசக்கர வாகனம் மீது ஏறி இறங்கிய லாரி.. உடல் நசுங்கி பெண் பொறியாளர் பலி - தம்பி கண் முன் நடந்த சோகம்

x

மதுரவாயல் அருகே, இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், மென்பொருள் பெண் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் போரூரை சேர்ந்தவர் சோபனா. மென்பொருள் பொறியாளரான இவர், 12ம் வகுப்பு பயிலும் தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், மதுரவாயல் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, அவர் சாலையில் தவறி விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில், அவரது தம்பி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்