பெரியார் பஸ் ஸ்டாண்டில் மீண்டும் நிறுவப்படும் மதுரையின் தனி அடையாளம்

x

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட மீன் சிலையை, மதுரை மாநகாரட்சியின் முக்கிய பகுதியில் மீண்டும் நிறுவமாறு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் ஆணையிட்டது. மேலும் சிலையை மீண்டும் நிறுவுவதற்கான இடத்தை ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையில், மதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவையும் நீதிமன்றம் அமைத்தது. இந்தநிலையில் வழக்கறிஞர் ஆர்.காந்தி, எம்.பி சு. வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மீன் சின்னம் அமைப்பது குறித்து நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் அவர்கள், பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் உள்ள சுற்றுலாத்துறை வழிகாட்டி மையத்தின் முன், மீன் சிலையை வைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்