சந்துக்குள் பள்ளி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்.. திடீரென மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்

x

மதுரை அருகே பள்ளி பேருந்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் மாணவிகளை ஏற்றிச் சென்றபோது, கள்ளந்திரி அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதை அறிந்த ஓட்டுநர், அங்கிருந்த சந்து ஒன்றுக்குள் வாகனத்தை 30 நிமிடம் நிறுத்தியுள்ளார்.

நீண்ட நேரம் வேனில் அடைத்து வைக்கப்பட்டதால், மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேர் மயக்கமடைந்தனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் நலமுடன் உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்