பட்ட பகலில் பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்.. மதுரையில் அதிர்ச்சி!

x

மதுரையில், மர்மநபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணையில், உயிரிழந்த நபர் கோவையில் கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்த சரவணகுமார் என்பதும், விடுப்பு எடுத்து மதுரைக்கு வந்ததும் தெரியவந்தது. இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்