மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம் - ஒரே வாரத்தில் 2 கொலைகள் - அதிர்ச்சி காட்சிகள்

மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம் - ஒரே வாரத்தில் 2 கொலைகள் - அதிர்ச்சி காட்சிகள்
மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம் - ஒரே வாரத்தில் 2 கொலைகள் - அதிர்ச்சி காட்சிகள்
Published on

மதுரையில் ஒரே வாரத்தில் 2 கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறி இருப்பது மக்களை அச்சமடைய வைத்திருக்கிறது.

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்ற 30 வயது இளைஞரை மர்மநபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருப்பதும் உறுதியானது. கடந்த 1ஆம் தேதி சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பழிதீர்க்கும் விதமாக மணிமாறன் கொலையானதும் தெரியவந்தது.

மணிமாறனை கொலை செய்த நவீன் என்பவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம் - ஒரே வாரத்தில் 2 கொலைகள் - அதிர்ச்சி காட்சிகள்

X

Thanthi TV
www.thanthitv.com