மே 2ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

வரும் மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் காண்பதற்கான கட்டண விவரங்களை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்த கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண விரும்புபவர்கள், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை இணையதளத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளத்திலும் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு சித்திரை வீதியில் உள்ள தங்கும் விடுதியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாமல் தரிசிக்க விரும்புவோர், தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்