இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதல் விவகாரம்.. "வன்கொடுமை தடுப்பு சட்டம் எதற்கு?" - நீதிபதி பரபரப்பு கருத்து

x
  • வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
  • இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில், வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், ஒரு பிரிவினருக்கு, ஜாமின் அளிக்கப்பட்டது. இந்த ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கு, நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில்,
  • மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மனுவை பரிசீலித்திருந்தால் அதனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கலாகும் நிலை ஏற்பட்டிருக்காது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
  • விசாரணை நீதிமன்றம் ஆட்சேபத்தையும் பதிவு செய்து இயந்திரத்தனமாக ஜாமின் வழங்கியுள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான துன்புறுத்தல், அவமரியாதை மற்றும் அவமானத்தை தடுத்திடும் வகையில் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
  • உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமை என கூறி, (gfx in 5 )வழக்கை மீண்டும் அதே நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்